ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார்.
ஜூலியா தன் காதலரை உக்ரைனில் விட்டு விட்டு வந்திருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, இத்தனை நாட்கள் எப்போது போர் நிறைவடையும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நிலைமை வேறுவிதமாக சென்று கொண்டிருக்கிறது. இது தான் நம் வாழ்க்கை என்று தீர்வாகிவிட்டது.
எனவே, நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது தாய் நாட்டிற்காக தன் கடமையை செய்ய காரிலேயே புறப்பட்டு விட்டார். தன் நாட்டிற்காக போராடுவது மட்டுமல்லாமல் தன் காதலையும் அங்கு விட்டு வந்திருப்பதால், அங்கு சென்று விட்டார்.
தன், காதலரை அவர் சந்தித்த பிறகு இருவரும் சேர்ந்து காபி அருந்தி கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில், தான் ரஷ்யா கீவ் நகரில் தீவிர ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஜூலியாவின் காதலர் கூறுகையில், ஜூலியா தற்போது என்னுடன் இல்லாமல் இருந்திருந்தால் நான் கீவ் நகரில் பணிக்கு சென்றிருப்பேன். நல்ல வேளையாக அவர் வந்து விட்டார். என் உயிரை காப்பாற்றி விட்டார் என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.