ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கனிமொழி என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கனிமொழியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடத்த திட்டமிட்டதால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனை அடுத்து திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து காதலர்கள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த சக்திவேல்-ஜீவா தம்பதியினர் பெற்றோர் எதிர்ப்பை மீறி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இவர்களும் பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.