Categories
மாநில செய்திகள்

“1 ஆண்டுக்கு” பின் குறைந்த காற்று மாசுபாடு…. தூய காற்றால் புத்துணர்ச்சியடைந்த டெல்லி மக்கள்..!!

டெல்லியில் சரியாக ஓராண்டுக்கு பின்னர் காற்று மாசுபாடு குறைந்து சற்று தூய்மையான காற்று வீசுவதாக சுற்றுசூழல்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அளவு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காற்று மாசுபாடு குறித்த தர அட்டவணையில் பூஜ்யத்திலிருந்து 500 புள்ளிகள் வரை, மிக தீவிரம்,  மோசம், திருப்திகரம், தூய்மை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் டெல்லியில் கடந்த 24ம் தேதி 164 ஆக இருந்த காற்று மாசுபாடு புள்ளிகள் கடந்த 25ஆம் தேதி பெய்த மழைக்கு பின் படிப்படியாக குறைந்து வருகிறது.

Image result for delhi air pollution

அதன்படி 50 முதல் 100 புள்ளிகளுக்குள் மட்டுமே மாறி மாறி கடந்த 5 நாட்களாக நிலவி வந்த நிலையில், நேற்று 65 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதையடுத்து சராசரியாக ஓராண்டுக்கு பின்னர் டெல்லியில் காற்று மாசு குறைந்து சற்று தூய காற்று வீசுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து மேலும் காற்று மாசு குறைந்து காற்று தூய்மை அடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |