பிரிட்டனில் குறைவான வருமானம் பெறுபவர்களை ஊக்கப்படுத்த அடுத்த வருடத்திலிருந்து ஊதியத்தை அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் சான்சலர் ரிஷி சுனக் வரும் புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார். அதில், வரும் 2022 ஆம் வருடத்திலிருந்து, 23 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8.91 பவுண்டுகள் குறைந்தபட்ச சம்பளம்.
இது அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து 9.50 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது ஒரு சராசரி பணியாளர் வருடத்திற்கு குறைந்தது ஆயிரம் பவுண்டுகள் அதிகம் பெறமுடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
இதேபோன்று 21 மற்றும் 22 வயதில் உள்ள ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு 9.18 பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது. அப்ரண்டிஸ்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 4.81 பவுண்டுகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.