Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விமான எரிபொருள் விலை குறைவு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 1,17,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் விலை குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. அதன்படி கிலோ லிட்டருக்கு 2775 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு 40 சதவீதம் செலவு எரிபொருளில் மட்டுமே கழிகிறது. தற்போது எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |