Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் : நிதியமைச்சர் அறிவிப்பு!!

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,”

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அறிவிப்பு:

* அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும்.
* குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தோம்.
* நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
* நகர்புறத்தில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28ம் தேதி முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது.

Categories

Tech |