காஞ்சிபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 ரவுடிகளை காவல்துறையினர் தைரியமாக கைது சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் நேற்று வாகன பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் நிறுத்திய போது அவர்கள் குடித்திருந்தது தெரியவர, அவர்கள் யார் ? எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த நரேஷ், சீனு என்பதும் காஞ்சிபுரம் பிரபல ரவுடியான தனிகாவின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 2 பேர் மீதும் பல அடிதடி வழக்குகள் உள்ளதாலும், சம்பவத்தன்று கையில் கத்தி உருட்டுக் கட்டைகள் உள்ளிட்டவற்றை வைத்து சுற்றிக் கொண்டிருந்ததாலும், மற்றும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வந்த புகார் இருப்பதாலும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே அதே பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை அதிகாரிகள் கைது செய்தது பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.