Categories
மாநில செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் அலை 3.4 மீ வரை எழும்பும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி காற்று வீடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஜூன் 9 முதல் 11ம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தென் மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 9 முதல் 13ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல ஜூன் 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஜூன் 13ம் தேதி கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதேபோல, நீலகிரி, தேனி,கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |