இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்குவதுடன் அரசு சார்பாக மாதம்தோறும் மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. அந்த மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன் அடைய விரும்புவோர் பட்டியல் இனம், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளை சேர்ந்த பெண்கள், தேயிலைத் தோட்ட பெண் பணியாளர்கள், தீவுகளில் வசிக்கக்கூடியவர்கள் போன்றவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வீட்டில் வேறு யாருடைய பெயரிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கக் கூடாது. இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தொற்று காரணமாக மானியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து இந்தத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கடந்த மே 11 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தில் உள்ள 12 கோடி பணியாளர்களுக்கு இந்த ஆண்டு மாதம்தோறும் ரூபாய் 200 மானிய தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி தற்போது 14.2 கிலோ வீட்டு பயன்பாடு சிலிண்டர் ரூபாய் 1003 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள பயனாளிகளுக்கு 200 மானிய தொகை செலுத்தப்படும் என்பதால் இவர்களின் சிலிண்டர் விலை 803 ஆக குறைந்துள்ளது.