இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.
ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. ஏனென்றால் சென்ற ஆண்டின் மே மாதம் முதலே பலருக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லை. தற்போது சிலிண்டருக்கான மானிய உதவியை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி எல்பிஜி மானியம் அதாவது எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா? இது உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கே பார்க்கலாம்.
1. முதலில் www.mylpg.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
2. அதில் உங்களுக்கு ஸ்க்ரீனின் வலது புறத்தில் எரிவாயு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் (LPG Cylinder) புகைப்படம் தோன்றும்.
3. நீங்கள் உங்கள் சேவை எரிவாயு சிலிண்டர் வழங்குநரின் புகைப்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. அதன் பிறகு ஒரு புதிய விண்டோ திரையில் திறக்கும்.
5. இப்போது வலதுபுறத்தில் மேல் பக்கம் சைன் இன் மற்றும் புதிய பயனர் ஆப்ச்ஷனை டேப் செய்யவும்.
6. உங்களுக்கு ஏற்கனவே இதில் ஒரு ஐ.டி இருந்தால், அதன் மூலம் லாக் இன் செய்யவும். உங்களுக்கு இதில் ஐ.டி இல்லையென்றால், ‘நியூ யூசர்’-ல் டேப் செய்து வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும்.
7. இப்போது உங்கள் முன் புதிய விண்டோ திறக்கும். இதில், வலது பக்கத்தில் ‘வியூ சிலிண்டர் புக்கிங் ஹிஸ்டரி’- ஐ கிளிக் செய்யவும்.
8. உங்களுக்கு எந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது ஆகிய தகவல்கள் இங்கே கிடைக்கும்.
9. இதனுடன், நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கு மானியப் பணம் கிடைக்காமல் இருந்தால், ஃபீட்பேக் என்ற பட்டனில் கிளிக் செய்யவும்.
10. இப்போது நீங்கள் மானிய பணம் கிடைக்காததற்கான புகாரையும் தாக்கல் செய்யலாம்.
11. இது தவிர, 18002333555 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்யலாம்.