Paytm அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது Paytm, Bharat, Indane மற்றும் HP Gas போன்றவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த அதிரடி சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்பார்ம் வாயிலாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய்.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனாளர்கள் Paytm வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
LPG சிலிண்டரை முன் பதிவு செய்வோருக்கு இது சூப்பர் சலுகையாகும். Paytmல் புது பயனாளர்கள் இணைந்தால் அவர்களுக்கு, 15 ரூபாய் கேஷ்பேக் பெற பயனர் “FIRSTGAS” குறியீட்டைப் பயன்படுத்தவும். அதேபோன்று நீங்கள் Paytm வாலட்டைப் பயன்படுத்தினால், பயனாளர் “WALLET50GAS” குறியீட்டை உள்ளிட்டு முன் பதிவு செய்தால் 50ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் கூடுதல் கட்டணத்தில் எரிவாயு நிரப்புதல்களை முன்பதிவு செய்ய பயனாளர்களை Paytm அனுமதிக்கிறது.
Paytmல் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
# Paytmத் திறந்து ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ் “காஸ் சிலிண்டர் புத்தகம்” என்ற பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
# தற்போது LPG சிலிண்டர் சேவை வழங்குநரை தேர்ந்தெடுத்து, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல்எண்/17 இலக்க எல்பிஜி ஐடி/நுகர்வோர் எண்ணை உள்ளிட வேண்டும்.
# பணம் செலுத்த்தி உங்களது முன் பதிவைத் தொடரவேண்டும். Paytm Wallet, Paytm UPI, கார்டு மற்றும் நெட்பேங்கிங் ஆகிய உங்களின் விருப்பமான பேமெண்ட் முறையில் நீங்கள் பணம் செலுத்தலாம்.
# பணம் செலுத்தியபின், உங்களது முன்பதிவு உறுதிசெய்யப்படும். பின் 2 -3 நாட்களில் கேஸ் சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடும்.