Categories
தேசிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தி…. ஷாக் கொடுத்த எண்ணெய் நிறுவனம்….!!

வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையை இந்திய எண்ணெய் நிறுவனம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாகசிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது.

இதையடுத்து தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ரூ.50 உயர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த வருடமும் மானியம் இல்லாத வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாற்றாமல் அதே விலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து வணிகரீதியான சிலிண்டருக்கு விலை உயர்வை அறிவித்துள்ளது.

இதன் மூலம் டெல்லி மற்றும் மும்பையில், மானியமில்லாத சிலிண்டருக்கு ரூ 694 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.720.50 மற்றும் சென்னையில், ரூ.710 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. மேலும் வணிக ரீதியிலான சிலிண்டர்களை வாங்குபவர்கள் டெல்லியில் ரூ.1349, கொல்கத்தாவில் ரூ.1410, மும்பையில் ரூ.1297.50 மற்றும் சென்னையில் ரூ.1463.50 ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

 

Categories

Tech |