லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியாவின் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது .இந்த சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது . இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் – காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 63 ரன்னும், காட்மோர் 57 ரன்னும், குர்பாஸ் 35 ரன்னும் எடுத்தனர்.
இதன்பிறகு 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே கிளாடியேட்டர்ஸ் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக தனுஷ்கா குணதிலகா 54 ரன்னும், குசால் மெண்டிஸ் 39 ரன்னும் எடுத்தனர் . மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக காலே கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக 178 ரன்னில் சுருண்டது.இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கான விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.