Categories
கிரிக்கெட் விளையாட்டு

LPL 2021 FINAL :கோப்பையை வெல்லப்போவது யார்….? காலே கிளாடியேட்டர்ஸ் VS ஜாஃப்னா கிங்ஸ் இன்று மோதல் ….!!!

லங்கா பிரீமியர் லீக்  தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் – ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .

இந்தியாவில் ஐபிஎல் தொடரை போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் போட்டி முதல் சீசன் நடத்தப்பட்டது. இதில்  ஜஃப்னா ஸ்டாலியன்ஸ்அணி சாம்பியன் பட்டம் வென்றது .ஐபிஎல் தொடரை போலவே இந்தப் போட்டியிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் .இதில் இந்த  சீசனுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டி கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது .இதில் கொழும்பு ஸ்டார்ஸ் , டம்புல்லா ஜியாண்ட்ஸ் , கலே  கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி  வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன .

இதனிடையே இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலே கிளாடியேட்டர்ஸ் – ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில்திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 -ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது .இதையடுத்து பானுக ராஜபக்ச தலைமையிலான காலே கிளாடியேட்டர்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது .அதேசமயம் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இந்திய நேரப்படி இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறுகிறது.

Categories

Tech |