லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லூசிஃபர் . நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது . இந்த படத்தில் விவேக் ஓபராய், டோவினோ தோமஸ் ,சாய்குமார் ,மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கியிருந்தார் . முதலில் இந்த படத்தை விவி விநாயக் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது . இதையடுத்து சமீபத்தில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது .
தற்போது நடிகர் சிரஞ்சீவி ஆச்சாரியா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் லூசிபர் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . முதலமைச்சரின் மகள் கதாபாத்திரம் அதாவது வில்லனுக்கு மனைவியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . மலையாளத்தில் அந்த கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .