Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கு அடித்த லக்…. முன்னணி நடிகருடன் நடிக்க வாய்ப்பு…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு முன்னணி நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட இச்சீரியல் தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தற்போது இந்த கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடித்து வருகிறார். இவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை காவியாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி பிரபல நடிகர் பரத் நடிக்கும் படத்தில் காவியா நடிக்க உள்ளார். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையில் காவியா கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |