Categories
உலக செய்திகள்

“இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா!”…. சும்மா கிடந்த நாற்காலியால்…. லட்சாதிபதியான பெண்…!!!

பிரிட்டனில் ஒரு பெண் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலி, 16250 பவுண்டுகளுக்கு விற்பனையாகியிருக்கிறது.

இங்கிலாந்தில் இருக்கும் Brighton என்னும் நகரில் வசிக்கும் ஒரு பெண், பழைய பொருட்கள் இருக்கும் கடையில் நாற்காலி ஒன்றை 5 பவுண்டுகள் கொடுத்து வாங்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக அவரின் வீட்டில் அந்த நாற்காலி இருந்திருக்கிறது. அப்போது அவரின் வீட்டிற்கு வந்த ஒரு நபர், அந்த நாற்காலியில் 20-ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்று எழுதியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். எனவே, இதுபற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

அப்போது, ஆஸ்திரியாவில் கடந்த 1902-ஆம் வருடத்தில் வாழ்ந்த Koloman Moser என்னும் கலைஞரால் அந்த நாற்காலி உருவாக்கப்பட்டிருப்பது என்பது தெரியவந்திருக்கிறது. இது பற்றி தகவல் தெரிந்ததும், ஒரு ஏல நிறுவனம் 16, 250 பவுண்டுகள் கொடுத்து அந்த நாற்காலியை வாங்கிக்கொண்டது. வெறும் ஐந்து பவுண்டுகளுக்கு தான் வாங்கிய நாற்காலி இவ்வளவு விலை போனதால் அந்த பெண் வாயடைத்து போயிருக்கிறார்.

Categories

Tech |