இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியில் நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்குவது வழக்கம். இந்தப் பதக்கங்கள் ரயில்வே காவல் அதிகாரிகள், மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி இந்த வருடத்திற்கான பதக்கம் பெறும் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் குடியரசுத் தலைவர் மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 88 பேருக்கும், தகைசால் பணிக்கான காவல் விருது 662 பேருக்கும், வீரதீர செயலுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழ் நாட்டை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு 2 பிரிவுகளின் அடிப்படையில் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீரதீர செயலுக்கான காவல் பதக்கப் பட்டியலில் தமிழக காவல்துறையினரின் பெயர் இடம் பெறவில்லை.