நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் என மொத்தம் 1,000 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், மருத்துவமனை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.