சசிகலா நுரையீரல் தொற்று மற்றும் கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு கூடி இருப்பது கண்டறியப்பட்டது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.