Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அழகில் மயங்கிய நபர்… வயிறு வலியால் துடித்த இளம்பெண்… சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சென்னை மதுரவாயல் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அப்பெண்ணை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்க காத்திருந்தனர். பின்னர் சில மணி நேரங்களில் அழகான ஆண் குழந்தை ஒன்று அப்பெண்ணிற்கு பிறந்தது.

இதனை தொடர்ந்து மக்களிடம் பெற்றோர்கள் விசாரித்ததில் லோகேஷ் என்பவரை தான் காதலித்து வந்ததாகவும் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் லோகேஷ் மீது பெற்றோர்கள் புகார் அளிக்க காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு லோகேஷை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்ற வருடம் பணி நிமித்தம் மதுரவாயல் வந்த லோகேஷ் அந்த பெண்ணின் வீட்டின் அருகே வந்த சமயம் அவரது பைக் பஞ்சர் ஆகிவிட அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது தண்ணீர் கொடுத்த பெண்ணை கண்டு தனது தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஒருவாரம் ஆன பின்பும் பெண்ணிடமிருந்து எந்த அழைப்பும்  வராததால் மீண்டும் அதே வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அந்தப் பெண் செல்லும் இடமெல்லாம் சென்று காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பிறகு அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்த நேரம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டுச் சென்றுள்ளார். அதோடு லோகேஷ்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |