டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது.
பொய் சொன்ன அதிமுக:
குறிப்பாக மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்திக்கும் என்ற வார்த்தையை சேர்த்துள்ளார். இதுதான் தற்போது அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வருமானம் சம்பந்தமான விஷயத்தைத்தான் குறிப்பிட்டிருப்பது அதிமுக இவ்வளவு நாட்களாக வாய்க்கு வந்தபடி பொய் சொன்னதை நிரூபித்துள்ளது.
வருவாய் இழப்பு:
ஏனென்றால் தொடர்ந்து தமிழ் அரசின் அமைச்சர்கள் நாங்கள் வருமானத்திற்காக கடைகளை திறக்க வில்லை. வேறு மாநிலங்களுக்கு தமிழர்கள் மதுபானங்களை வாங்குவதற்காக செல்கிறார்கள். அதனை தடுப்பதற்காகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மதுக்கடைகளை திறந்துள்ளோம் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லி வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கக்கூடிய மேல்முறையீட்டு மனுவில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள் அரசுக்கு வருவாய் இழப்பு என்று.
விமர்சனம்:
எனவே இந்த விவகாரம் என்பது தற்போது பெரிய ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. பொதுவாக வருமானம் என்பதனை ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு நேரங்களில் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இப்படியான ஒரு அசாதாரண சூழல் நிலவ கூடிய நிலையில் தமிழக அரசு இத்தகைய ஒரு விஷயங்களை மனுவில் குறிப்பிட்டு இருப்பது நிச்சயமாக ஒரு ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக தான் பார்க்கப்படுகின்றது. தமிழக அரசின் சார்பில் வாதங்களை மிக ஆணித்தரமாக வைப்பதற்கு மிக உதவிகரமாக இருக்கும். எனவே தான் இந்த ஒரு காரணத்தையும் மனுவில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது.