மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு கட்டாயம் என பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், M.Phil., Ph.D., மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம் எனக் கூறியுள்ளது. படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. பேறுகால விடுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகைகள், வருகைப்பதிவேட்டில் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கிட ஏதுவாக உரிய விதிகளை வகுக்கவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, வருகைப்பதிவு, தேர்வுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு அல்லது இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்பைத் தொடரும் பெண் மாணவர்களுக்குத் தேவையான பிற வசதிகள் தொடர்பான அனைத்து தளர்வுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.