மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி.மு.க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து பேசியிருக்கிறார்.
வானொலி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இது முதல் இரண்டு அலைகளை விட அதிகமாக பரவுகிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட்டதால் தி.மு,கவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது, இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் கொடுப்பதில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. எனினும், முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வுகள் மேற்கொண்டதன் மூலமாக அந்த பிரச்சனைகள் நீக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.