ஒரே ஒருமுறை மட்டும் சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய புதிய வகை மின்சார காரை பிரபல நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.
மிகவும் பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் எதிர்வரும் 20 வருடங்களில் மின்சார கார்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஒரே ஒரு முறை மட்டுமே சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய அதிரடியான மின்சார கார் ஒன்றை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.
இவ்வாறு களமிறக்கப்படும் இந்த மின்சார காரில் அனைத்து வசதிகளும் உள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் இது மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டவுடன் எந்த விலையில் விற்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்பது தொடர்பான தகவலை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.