ஆதார்கார்டின் முக்கியத்துவம் மற்றும் தேவையை மனதில் வைத்து UIDAI குடிமக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார்கார்டு குறித்த பணிகளை நீங்கள் எங்கும், எந்நேரத்திலும் செய்துக்கொள்ள இயலும். உங்களது ஆதார் குறித்த பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மொபைல் செயலி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது, mA adhaar மொபைல் பயன்பாடு அண்ட்ராய்டு,iOSல் கிடைக்கும். mAadhaar செயலியின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்தும், பதிவுசெய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்தும் இயக்கப்படலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் mAadhaar செயலியைப் பயன்படுத்தினால், இச்செயலியில் கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் உங்களது ஆதாரில் பதிவுசெய்யப்படாத மொபைல் எண்ணில் பயன்படுத்தப்படும் மொபைல் போனில் mA adhaar செயலியை பதிவிறக்கம் செய்தால், இச்செயலியின் அனைத்து அம்சங்களையும் உங்களால் பயன்படுத்த இயலாது. இந்த செயலியை முழுமையாகப் பயன்படுத்த உங்களது ஆதார் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTPஆனது அனுப்பி வைக்கப்படும். இந்த OTP-யை உள்ளிட்டபின், அண்ட் செயலியின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவே பதிவுசெய்யப்படாத மொபைல் எண்ணுடன் mAadhaar மொபைல் செயலியைப் பயன்படுத்தினால், ஆதார் மறு பதிப்புக்கு ஆர்டர் செய்தல், அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவல்களைப் பெறுதல், ஆதார் சரிபார்ப்பு, QR குறியீடு ஸ்கேன் ஆகிய அம்சங்களைப் பெறலாம்.
இந்த செயலியை பதிவுசெய்யாத மொபைல் எண்ணில் இருந்து பயன்படுத்தலாமா, வேண்டாமா என பலர் mAadhaar செயலியைப் பற்றி இது போன்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். ஆகவே பதிவுசெய்யாத மொபைல் எண்ணிலும் இச்செயலியை பயன்படுத்தலாம் என்பதே இதற்கான பதில் ஆகும். அந்த அடிப்படையில் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணில் இருந்து இந்த பயன்பாட்டின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் அணுகமுடியாது. அதே நேரம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் நீங்கள் 35க்கும் மேற்பட்ட சேவைகளைப் பெறலாம்.