மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியியை சேர்ந்தவர் பிராங்கிளின் வளன். இவர் தனது குடும்பதினருடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் அன்பரசு இம்மானுவேல்(9). சிறுவன் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்பரசு இம்மானுவேல் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான் .
அப்போது பந்து மாடியில் விழுந்துள்ளது. மாடியில் விழுந்த பந்தை இம்மானுவேல் எடுக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளான் . இதில் இம்மானுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இம்மானுவேலை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இம்மானுவேல் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.