தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. நடிகை ஹன்சிகா தன்னுடைய நெருங்கிய தோழி ரிங்கி என்பவரின் கணவரை தான் 2-வதாக திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி ஏர்போர்ட்டில் தரையில் அமர்ந்து பையில் எதையோ தேடிக் கொண்டிருக்கும் ஒரு போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துடன் லெஹங்கா வாங்குவதற்கு காசு தேடிக் கொண்டிருப்பதாகவும் கீழே பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் திருமண ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் லெஹங்கா வாங்குவதற்கு காசு தேடிக் கொண்டிருக்கிறீர்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் உங்களுடைய ஜிபே நம்பரை அனுப்புங்கள் நாங்கள் உங்களுக்கு லெஹங்கா வாங்குவதற்கு பணம் அனுப்புகிறோம் என்றும் நக்கலாக பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram