Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அனுமதிக்க மறுத்த தந்தை….. மருமகனின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் மருமகன் மாமனாரை பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பிரியதர்ஷினி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினியும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மணி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சென்னையில் வசித்து வந்த பிரியதர்ஷினி தனது கணவருடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களை சரவணன் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மணி சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பாட்டிலால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |