Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியில் இருந்த மின் கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக பிரபாகரன் மோதி விட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |