நாய்கள் மானை கடித்து குதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலை காப்புக் காட்டில் காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வன விலங்குகள் தண்ணீர் தேடி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. அப்போது அங்கு தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் கடித்து வருகிறது.
இந்நிலையில் 3 வயது ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி பொன்னேரி அருகில் உள்ள மலை அடிவாரத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்த மானை அங்கிருந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே புதைத்தனர்.