Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உள்ளே விட மாட்றாங்க” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்…. இயக்குநர் பேச்சுவார்த்தை….!!

குறைகளை சொல்வதற்காக வந்த பணியாளர்களை அலுவலர் உள்ளே அனுமதிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் நடக்கும் பல திட்டப்பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மண்டல இயக்குனர் சசிகலா ஆகியோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளை சந்தித்து தங்களின் குறைகளை சொல்வதற்காக அலுவலகத்திற்கு 100-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி ஒருமையில் பேசி அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஒருமையில் பேசி நகர் நல அலுவலர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தங்களுக்கு குப்பை அல்ல வண்டிகளை தர வேண்டுமாறும், கையுறை போன்ற உபகரணங்களை வழங்குமாறும் கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி இணை இயக்குநர் விஜயகுமார் ஆணையாளர் அறைக்கு சென்று தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களின் குறைகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். இதனைக் கேட்ட அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |