Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் தயாராகலாம்… தேர்வு எழுதினால் தான் பட்டம் – யுஜிசி தீர்மானம்

கல்லூரி இறுதி தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதாமல் பட்டம் பெறமுடியாது மென்றும் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதி தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் நிச்சயம் பட்டம் பெற முடியாது என்று கூறியிருந்தது.

யூஜிசியின் உத்தரவுகளை மீறி மாநில அரசுகள் கல்லூரி தேர்வுகள் இரத்து செய்ய முடியாது என்றும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகளின் கல்லூரி தேர்வு ரத்து அறிவிப்புகள் விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாகவும் யூஜிசி குற்றம் சாட்டி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிப்பதற்கு யுஜிசிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |