மாணவிகள் பள்ளி படிப்பை முடித்தால் 25 ஆயிரம் ரூபாயும் கல்லூரிப் படிப்பு முடித்தால் 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான திரு நிதீஷ் குமார் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பள்ளிப்படிப்பு முடிக்கும் மாணவிகளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் மாணவிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதி உதவியாக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதியவர்களுக்கு காப்பகங்களும், நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளும் அமைத்து தரப்படும் என்றும் கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் சுகாதார வசதிகளும், மயானங்கள்லும் ஏற்படுத்தித் தரப்படும் என்று திரு நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.