மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி தனது வீட்டில் தனியாக இருந்த போது பெரியகாரைக்காடு பகுதியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி என்பவர் வீட்டிற்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.