Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாசலில் நின்ற மாணவி…. வசமாக சிக்கி வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோமலபுரம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர்.

அப்போது சரத் தனது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் காரில் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அதன்பின் அவர்கள் 2 பேரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மாணவியை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த காரை மடக்கி அதில் இருந்த வாலிபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்‌. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை கடத்திய சதீஷ்குமார் மற்றும் சரத் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |