17 வயதுடைய மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நெய்வேலியில் வசிக்கும் சந்துரு என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்துருவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பிளஸ்-2 மாணவியை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.