மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமாரிக்குப்பம் பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் பேரணாம்பட்டு பகுதியில் வசிக்கும் தற்போது 12 – ஆம் வகுப்பு முடித்த 17 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து பதற்றமடைந்த மாணவியின் பெற்றோர் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கௌதம் அந்த மாணவியுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கௌதமிடமிருந்து அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் கௌதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.