Categories
உலக செய்திகள்

‘என் குழந்தைக்கு நீ தான் அம்மா’…. மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவருக்கு நீதிபதி சிறைத்தண்டனை வித்தது தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஹெட்டிங்டனில் இயங்கி  வரும் ஆக்ஸ்போர்ட்  புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் 22 வயதான சஹீல் பாவ்நானி என்ற இந்தியர் படித்து வருகிறார். இவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவி ஒருவரை பின் தொடர்ந்து காதல் என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளார். மேலும்  ஒரு கட்டத்தில் ‘உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன்’ என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கு நூறு பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார்.

அதில் அந்த மாணவியை அச்சுறுத்தும் வகையிலான வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை அடுத்து ஆறு நிமிட குரல்ப்பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். அந்தப் பதிவில் “உன்னை என் மனைவியாக்கி கொள்வேன். என் குழந்தைகள் உன் மூலமாக தான் பிறக்கும். உன்னை என்னுடன் வாழ வைப்பேன்” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு பயந்து போன மாணவி வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்தும் தொல்லைப்படுத்தி வந்ததால் போலீசில்  புகார் அளிப்பேன் என்று மாணவரிடம் கூறியுள்ளார். இறுதியாக ஒரு கட்டத்திற்கு தாங்க முடியாமல் போகவே அந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்பொழுது இந்த வழக்கானது நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மாணவி கூறியதாவது ” அவர் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்” என்று தனது  அச்சத்தை நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்ற நீதிபதி நைகல் டேலி, அந்த மாணவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு இடைநிறுத்தம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அவர் அந்த மாணவியை எந்தவித்திலும் தொடர்பு கொள்ள ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த மாணவரின் தொல்லையில் இருந்து விடுபட்டதை நினைத்து மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Categories

Tech |