Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”… மாநிலம் முழுவதும் மீண்டும்?…. அரசுக்கு பரிந்துரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் கர்நாடக மாநில அரசுக்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒரு முக்கிய வலியுறுத்தலை முன்வைத்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2-வது மறுஆய்வு கூட்டத்திற்குப் பின் வருடாந்திர சோதனை நேர்மறை விகிதம் (WTPR) 5 சதவீதத்துக்கும் மேல் சென்றால் மட்டுமே மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிப்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள்படி கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை ஆபத்தானது அல்ல என்றும் முழு ஊரடங்கு விதிப்பது அவசியம் இல்லை என்றும் TAC அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட TAC அறிக்கையில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்கிறது. TRP விகிதம் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், ஆக்ஸிஜன் படுக்கைகள் 60 சதவீதமாகவும் இருக்கும் போது கடைசி முயற்சியாக முழு ஊரடங்கை விதிக்க இந்திய அரசாங்கம் பரிந்துரைக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே தேவைப்பட்டால் தினசரி இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில தடைகளை அரசாங்கம் விதிக்கலாம் என்று TAC பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில் மக்கள் முறையான வழிகாட்டுதல்கள் நடத்தையை பின்பற்றாததால், புதிய ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை இந்தியாவில் ஒமிக்ரான் மாறுபாடு தொற்று 61 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |