தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வாறு மார்பக புற்றுநோய் இருப்பதை அறிந்தால் சிறப்பான மருத்துவர்கள் மூலம் நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு பிறகு தேவைப்படும் ஹீமோதெரபி மற்றும் அதிநவீன ஹார்மோன் ரிசப்டர் பரிசோதனை ஆகிவை இலவசமாக செய்யப்படுவதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.