Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸாக பேசிய பாலா… சல்யூட் அடித்த ஆரி… வேற லெவலில் வந்த செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது குறுக்கிட்ட ரம்யாவின் வாயை அடைத்தார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் பாலா தனக்கு வந்த வாக்கியம் குறித்து பேசுகிறார் .

அதில் ‘கேம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்றால் எனக்கும் ஆரிக்கும் பிரச்சனை , எங்கள் இரண்டு பேரால் எல்லாருக்கும் பிரச்சனை என்பது போல் போய்க்கொண்டிருக்கிறது. வழக்கம்போல் நானும் அவரும் தான் இந்த வீட்டில் கெட்டவர்கள் என்பது அந்த போர்டை பார்த்தாலே தெரிகிறது. ஒரு சில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த கருத்துக்களை பதிவு செய்வது போல் உள்ளது ‌. சேப் கேம் என்பதை நானும் விளையாடல அவரும் விளையாடல’ என  மாஸாக பேசிய பாலாவைப் பார்த்து ரியோ முகம் மாற ,ரம்யா தலை குனிய, ஆரி சல்யூட் போடுகிறார் . விக்ரம்-வேதா பின்னணி இசையுடன் வந்த இந்த புரோமோவால் இன்றைய எபிசோடைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

Categories

Tech |