உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் புரேலாதில்லி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருரம்போட் போன்ற பகுதிகளில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோ ரயில் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய கட்டுமான திட்டங்களில் தூசி மேலாண்மையில் நிர்ணயிக்கப்பட்ட விதி முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் மாசு கட்டுப்பாட்டு குழுக்களும் உறுதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.