Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடையாள அட்டை வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. கலெக்டரின் செயல்….!!

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளர்புரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 147 நபர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அவர்களில் 97 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பதிவு மற்றும் 104 நபர்களுக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின் 1,500 ரூபாய்க்கான பராமரிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் மற்றும் 13 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் 23 பேர் மற்றும் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பங்களை கலெக்டர் பெற்றுள்ளார்.

Categories

Tech |