Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“முக கவசம் அணிந்து பேசுங்க” மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்… சேலத்தில் பரபரப்பு…!!

குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி.ஆர். மேம்பாலம் அடியில் மாற்றுத்திறனாளியான தம்பதிகள் வசிக்கின்றனர். இந்த தம்பதிகள் சமுக ஆர்வலர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ரவுண்டானா அருகே இரண்டு வாலிபர்கள் மதுபானங்களை அருந்தி கொண்டு மாற்றுத்திறனாளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளி அவர்களிடம் சென்று கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முக கவசம் அணிந்துகொண்டு பேசுமாறு கூறியுள்ளார்.
அதன்பின் குடிபோதையில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை சரமாரியாக அடித்துள்ளனர். இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூரமங்கலம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரித்துள்ளனர்.அதன்பின் மாற்றுத்திறனாளியை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |