Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிகளை சிறைபிடித்த காவல்துறையினர்…!!

மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து செல்வதாக கூறி அதனை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Categories

Tech |