மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட சிப், நோய்களிலிருந்து பாதுகாக்கும் என ராஷ்ட்ரிய காமெனு ஆயூக்கின் தலைவர்கள் திரு வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் காமதேனுதீபாவளி அபியான் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை ராஷ்ட்ரிய காமெனுஆயு தொடங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷ்ட்ரிய காமேனு ஆயு தலைவர் திரு வல்லபாய் கத்திரியா மாட்டுச் சாணம் கதிர் வீச்சுகளை தடுக்கும் தன்மை உடையது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட சிப் செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.