கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு நேத்து முன்தினம் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் அரசு மானியத்தை தவிர கிலோவுக்கு ரூபாய் 40 கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அதன்படி 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் கணக்கில் வராத 4,26,280 ரூபாய் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உதவி இயக்குனர் சுப்பிரமணியன், கிடங்கு மேலாளர் செந்தில்நாதன், கிடங்கு துணை மேலாளர் ஜீவிதா, உதவி வேளாண் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.