சுமார் 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறந்து சென்ற விமானம் எவ்வாறு மாயமானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
MH 370 இன்னும் போயிங் ரக விமானம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த MH 370 போயிங் ரக விமானத்தில் சுமார் 10 பணியாட்களும் 227 பயணிகளும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த விமானம் பெய்ஜிங்கிற்கு செல்லாமல் வழியிலேயே எங்கேயோ மாயமானது.
இதனையடுத்து 227 பயணிகளுடன் சென்ற விமானம் எவ்வாறு மாயமானது என்ற கேள்வியும் அல்லது இது தீவிரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற கேள்வியும் அல்லது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடலில் வீழ்ந்திருக்குமோ என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் விமானத்திற்கும், விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கும் என்ன நிகழ்ந்தது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.