Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா மருத்துவமும் பாத்தாச்சு… மனநலம் பாதித்த பெண் எடுத்த முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை.

இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட உமாதேவி, அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |